Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2021 21:37:06 Hours

மறைந்த பிரிகேடியர் சுதத் உதயசேனவின் உடல் இராணுவ மரியாதையுடன் தகனம்

இராணுவ ஆய்வு, பகுப்பாய்வு, திட்டம் மற்றும் மேம்பாட்டு கிளையின் (RAPDB) பிரிகேடியர் (பதிவு மற்றும் திட்டமிடல்) பிரிகேடியர் எஸ் டி உதயசேன ஆர்எஸ்பி கொவிட் -19 மற்றும் டெங்கு ஆகிய இரண்டிற்கும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை (2) மாலை காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் வெள்ளிக்கிழமை (3) காலை 11.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் இராணுவ மரியாதையுடன், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இடம்பெற்றது.

இராணுவத் தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடிவாக்கு, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பொரெல்லாவில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

பிரிகேடியர் சுதத் உதயசேன கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். தனது பாடசாலைக் கல்வியை முடித்த பிறகு இளம் சுதத் உதயசேன இலங்கை இராணுவ பாடநெறி பிஎம்ஏ 1 இன் பயிலிளவல் அதிகாரியாக 1990 செப்டம்பர் 7, இராணுவத்தில் சேர்ந்தார். பாகிஸ்தான் இராணுவ கல்லூரியில் தனது அடிப்படை இராணுவ பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 13 மார்ச் 1991 இல் இரண்டாம் லெப்டினன்டாக அதிகாரவாணைக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் புகழ்பெற்ற 6 வது இலங்கை இலேசாயுத காலாட்படைக்கு நியமிக்கப்பட்டார்.

அவரது முழுமையான அர்ப்பணிப்பு, மற்றும் பல ஆக்கபூர்வமான புதுமையான தயாரிப்புகளுடன் கூடிய திறமை அவரை சிறந்தவராக்கியதுடன் மிகவும் அங்கீகரிக்கப்பட்டது. அவர் 1990 இல் இராணுவத்தில் சேர்ந்த பிறகு அவர் செப்டம்பர் 12, 1994 இல் லெப்டினன்ட் நிலைக்கு உயர்த்தப்பட்டார், 1997 மார்ச் 07 அன்று கேப்டன் நிலைக்கும் 01 ஜூன் 2002 மேஜர் நிலைக்கும் 10 நவம்பர் 2009 லெப்டினன்ட் கேணல் நிலைக்கும் 07 செப்டம்பர் 2016 கேணல் நிலைக்கும் 15 ஜூன் 2020 பிரிகேடியர் நிலைக்கும் நிலை உயர்த்தப்பட்டார். அவர் இராணுவத்திற்கு தனது சேவையை பல்வேறு திறன்களில் வழங்கினார், உயர் தொழில்முறை மற்றும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவால் அவர்களாலட வெளியிடப்பட்ட சிறப்பு பகுதி 1 கட்டளையில் அவர் இலங்கை இலேசான காலாட்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் அளிப்பவராக இருந்தார் என குறுப்பிட்டுள்ளார்.