Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2021 12:20:30 Hours

வழங்கல் தளபதி இடைநிலை பராமரிப்பு நிலையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை ஆராய்வு

இராணுவ வழங்கல் கட்டளைகள் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், வியாழக்கிழமை (2) இலங்கை இராணுவ சேவைப் படை மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படைகளினால் நிர்வகிக்கப்படும் இடைநிலை பராமரிப்பு நிலையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை பரிசீலணை செய்தார்.

பிட்டிபான மற்றும் பொரலஸ்கமுவ பகுதிகளுக்கான அவரது விஜயத்தின் போது அவர்களின் தேவைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து விசாரித்தார். மெலும் அங்கு சேவையாற்றும் இராணுவத்தினரிடம் சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.