Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd September 2021 07:45:20 Hours

யாழ் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் பாராட்டு விழாவில் யாழ் பாதுகாப்புப் படைகள் பரிசுப் பொதிகள் வழங்கல்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையத்தின் எற்பாட்டில் 51 வது பிரிவின் 512 வது பிரிகேட் தலைமையக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற சளைக்காது அர்ப்பணிப்பு, உயிருக்கு ஆபத்தான அபாயங்களில் கொவிட் 19 சிகிச்சைக்காக நீடித்த அர்ப்பணிப்பை வழங்கும் யாழ் குடா நாட்டு சுகாதாரத் துறை முன்னணி ஊழியர்களை பாராட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது ஊக்கத்தொகையும் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களையும் தியாகி அறக்கட்டளை நிறுவனரும் அதன் தலைவருமான திரு வாமதேவ தியாகேந்திரன் நன்கொடையில் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவாக்கு, அங்கிருந்த ஆண்கள் மற்றும் பெண்களின் இடைவிடாத சேவையை அங்கீகரித்து தலா ரூபா 5000 மற்றும் ரூபா 3000 மதிப்புள்ள உணவு வவுச்சர்கள் முறையே யாழ்ப்பாண குடாநாட்டில் சேவையாற்றும் 84 பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் 276 குடும்ப நல சேவை உத்தியோகத்தர்களுக்கும் வழங்கினார்.

இருப்பினும், சுகாதார வழிகாட்டுதல்கள் காரணமாக 14 பொது சுகாதார பரிசோதகர்களும் 14 குடும்ப நல சேவை உத்தியோகத்தர்களும் மட்டுமே இந்த நிகழ்வுக்கு அடையாளமாக அழைக்கப்பட்டனர். இந்த பரிசு வவுச்சர்கள் கார்கில்ஸ் ஃபுட் சிட்டியில் அவர்களின் விருப்பப்படி அத்தியாவசிய உணவு பொருட்களை கொள்வனவு செய்துக் கொள்ள முடியும்.

இந்த திட்டத்திற்கு இணையாக, மேலும் 1 மில்லியன் மதிப்புள்ள 1000 உலர் உணவு பொதிகள், இராணுவப் படையினரின் ஒருங்கிணைப்பு மூலம் யாழ்ப்பாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வசதியற்ற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. திட்டத்தின் தொடக்கமாக, இரண்டு குடும்ப உறுப்பினர்கள் ஒரே சமயத்தில் பாதுகாப்புப் படைகளின் தளபதியிடமிருந்து தங்கள் உலர் உணவு பொதிகளை அடையாளமாகப் பெற்றனர். மேஜர் ஜெனரல் ஜகத் கொடிடுவாக்கு விடுத்த வேண்டுகோளை நிறைவேற்ற தயங்காத ஆதரவுடன் மீண்டும் பதிலளித்த ‘தியாகி அறக்கட்டளை தலைவர் திரு வி தியாகேந்திரனின் இந்த உன்னத திட்டத்திற்காக சுமார் 2.2 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடையினை வழங்கியுள்ளார்.

இந்த சிறப்பு பாராட்டு விழாவில் சுருக்கமாகப் உரையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவாக்கு சுகாதாரப் பணியாளர்களின் முயற்சிகளைப் பாராட்டினார் மற்றும் இந்த கடினமான நேரத்தில் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக வந்த அனைத்து பொது சிகாதார பரிசோதகர்களுக்கும் குடும்ப நல சேவை உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இராணுவம் அதன் திறமையான பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவம் கடந்த தசாப்தத்தில் செய்தது போல் வைரஸுக்கு எதிராகவும் போராடி யாழ் குடாநாட்டு மக்களுக்கு இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என அவர் உறுதியளித்தார்.