Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd September 2021 08:45:11 Hours

யாழ்ப்பாண படையினரால் மேலும் இரண்டு ஏழைக் குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் புத்தசாசன , மதங்கள் மற்றும் கலாசார விவகாரஅமைச்சு ஆகியவற்றின் அனுசரணையுடன் வீடற்ற பொதுமக்களுக்கு முறையான தங்குமிட வசதிகளை எற்படுத்திக் கொடுத்தல் என்ற சிந்தனையில் யாழ்பாண படையினரால் கொல்லன்கல்லடி மற்றும் உடுவில் தெற்கு பகுதிகளில் கட்டப்பட்ட இரண்டு புதிய வீடுகள் அண்மையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் ஒரு தேசத்தை உருவாக்கும் திட்டமாக வறியவர்களுக்கு நன்கொடையாளர்களின் உதவியுடன் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்குமாறு நாட்டின் சகல பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கும் அறிவுறுத்திருந்தமைக்கு அமைவாக யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிவாக்குவின் வழிகாட்டுதலின் பேரில் யாழ்பாண படையினரின் தொழில்நுட்ப, பொறியியல் மற்றும் மனிதவள ஒத்துழைப்புடன் இரண்டு புதிய வீடுகள் கட்டப்பட்டன.

511 மற்றும் 515 வது பிரிகேட்களின் 10 வது இலங்கை பீரங்கி படை மற்றும் 9 வது இலங்கை இலேசாயுத காலாட் படை படையினர் 511 மற்றும் 515 பிரிகேட்களின் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ் மிகக் குறுகிய காலத்தில் நிறைவு செய்வதற்கான கட்டுமானத்திற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் பொறியியல் மனிதவளத்தை வழங்கியிருந்தனர்.

யாழ், தளபதி பாதுகாப்புப் படைத் தலைமையக மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு திங்கட்கிழமை (30) இரண்டு தனித்தனி விழாக்களின் போது அந்த வீடுகளின் சாவியை இரண்டு பயனாளிகளான திருமதி ஜெனதாஸ் அனுஸ்ரா மற்றும் திருமதி ராஜ்குமார் தட்சாயினி ஆகியோருக்கு வழங்கினார். அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக திறப்பு விழாக்களின் போது குறைந்த எண்ணிக்கையிலானோரே பங்குபற்றினர்.

எளிமையான வீட்டு திறப்பு விழாக்களின் போது உலர் உணவு பொதிகள் மற்றும் இரண்டு புதிய வீடுகளுக்குத் தேவையான சில அத்தியாவசிய வீட்டுப் பொருட்களும், பயனாளிகளுக்கு பிரதம விருந்தினர் மற்றும் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படையினரால் வழங்கப்பட்டன. 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்லாவும் இரண்டு நிகழ்வுகளிலும் கலந்துக் கொண்டார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் புத்தசாசனம், மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள், தளபதி 511வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜூட் பெர்னாண்டோ , 515 வது பிரிகேட் தளபதி கேணல் அருணா விஜேகோன், சிரேஸ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள், வீடுகளை கட்டிய படையினர் ஆகியோர் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து நிகழ்வில் கலந்து கொண்டனர்.