Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2021 15:41:30 Hours

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான புதிய இடை நிலை பராமரிப்பு மையம் திறந்து வைப்பு

"கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான கட்டுப்பாடு, தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு முன்னணியில் இருக்கும் இலங்கை இராணுவ வீரர்கள் நாடு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் நேரத்தில் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பெற்றோர்களைப் போன்று நாட்டிற்காக தங்களை அர்பணித்து வருகின்றனர். இன்று, மகா சங்கத்தின் உறுப்பினர்களுக்காக அதே பெற்றோரின் பராமரிப்பை போன்று இந்த தியான மடத்தை இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றுவதன் மூலம் பாதிக்கப்பட்ட பௌத்த பிக்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நீங்கள் உங்களுடைய அர்பணிப்பை செய்துள்ளீர்கள் என்று விஜேராம மாவத்தை, கொழும்பு 7 இல் அமைந்துள்ள சர்வதேச விபசன தியான மையத்தின் மத தலைவரும் (அனுஷாசனா) வவுட தொடந்தலாவ தம்மகிரி மடாலயத்தின் தலைவருமான கம்மாதனாச்சார்யா உடுடும்ரா காஷ்யப தேரர் கருத்து தெரிவித்தார்.

இவர் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் குறித்த தியான மையத்தில் இடை நிலை பராமரிப்பு மையத்தை அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கொழும்பில் உள்ள சர்வதேச விபசன தியான மையத்தில் கொவிட் -19 பாதிக்கப்பட்ட புத்த பிக்குகளுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட இந்த முதல் இடைநிலை பராமரிப்பு மையத்தை இன்று (30) காலை பிரதம அதிதியான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த இடை நிலை பராமரிப்பு மையத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கிய இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சுஜீவ நெல்சன் அவர்களும் இந்த நிகழ்வில் இராணுவத் தளபதியுடன் கலந்துகொண்டார்.

நாட்டில் பௌத்த பிக்குகளின் தொற்றுவீதம் அதிகரித்து வருகின்றமையினால், மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவா செனரத் யாப்பா மற்றும் 14 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், மிகக் குறுகிய காலத்திற்குள் பணிகளைச் செய்ய தளவாடப் படைப் பிரிவுகளின் ஒத்துழைப்புடன் மேற்கு பாதுகாப்பு படை மற்றும் 14 வது படைப்பிரிவு படையினரால் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த சிகிச்சை மையமானது அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருந்து காப்பகம் , அனைத்து வசதிகள் மற்றும் தனி எச்டியு கொண்ட 84 பாதிக்கப்பட்ட பௌத்த துறவிகளை 45 அறைகளில் சிகிச்சைக்காக தங்க வைக்க முடியும்.

இந்த நிகழ்வானது வென் டொக்டர் வலேகொட குணசிறி அனு நாயக தேரர் மற்றும் செயலாளர் அத்தங்கனே சசனரதன தேரர் ஆகியோரின் தலைமையில் சுகாதரா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரீத் பராயணங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.

இந்த சிகிச்சை மையத்தின் நிறுவனருடன் அன்றைய தலைமை விருந்தினரான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோர் புதிய வளாகத்தை நன்கு பார்வையிட்டனர்.

இந்த நிகழ்வின் இருதியாக திருமதி சுஜீவா நெல்சன் வென் உடுமும்பரா காஷ்யப தேரரிடம் ஒரு தொகை உபகரணங்களை கையளித்தார். சில நாட்களுக்கு முன்பு, திருமதி சுஜீ நெல்சன், 14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன, இராணுவ சேவா வனிதா பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரி பிரிகேடியர் துஷார பாலசூரிய மற்றும் சில அதிகாரிகள் இந்த புதிய இடை நிலை பராமரிப்பு மையத்தின் கட்டுமான முன்னேற்றம் தொடர்பாக பார்வையிட் வருகை தந்தனர்.

மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, மேற்குப் பாதுகாப்புப் படைகளின் தளபதி, மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்னா, 14 வது பிரிவு பொது அதிகாரி, , பிரிகேடியர் துஷார பாலசூரிய, இராணுவ சேவா வனிதா பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு மற்றும் சில அதிகாரிகள், திரு. விதுர ரூபசிங்க, 'ஜெயமகா பிலிசரனா' திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒரு சில அழைப்பாளர்கள் அந்த இடத்தில் இருந்தனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, 14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன, இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் நிஷாந்த பத்திரன, இராணுவ சேவா வனிதா பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரி பிரிகேடியர் துஷார பாலசூரிய மற்றும் சில அதிகாரிகளும் 'ஜெயமகா பிலிசரனா' திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு விதுர ரூபசிங்க மற்றும் சில விருந்தினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.