Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2021 21:00:43 Hours

மத்திய படைகளினால் இளைஞர் மன்ற கட்டிடம் இடைநிலை சிகிச்சை மையமாக மாற்றியமைப்பு

பண்டாரவளை பிந்துனுவெவ இளைஞர் மன்றம் அண்மையில் இடைநிலை சிகிச்சை நிலையமாக மேம்படுத்தப்பட்டு, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் சுகாதார அதிகாரிகளிடம் வியாழக்கிழமை (12) கையளிக்கப்பட்டது.

இத்திட்டம் 112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திஸாநாயக்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் மத்திய பாதுகாப்பு படையினரால், அவசரநிலை ஏற்படும் பட்சத்தில் 311 நோயாளிகளுக்கு இடமளிக்கும் வகையில் கட்டமையக்கப்பட்டுள்ளதோடு மத்திய மாகாணத்தில் அதிகரித்துவரும் சுகாதாரப் பாதுகாப்பு கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அவசியமான வகையில் கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணைகள் என்பனவும் வழங்கப்பட்டன. பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஆகியோரின் அறிவுரைகளுக்கமைய இத்திட்ம் முன்னெடுக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, 112 பிரிகேட் சிப்பாய்களின் ஆதரவுடன் இந்த நிலையத்தை ஒரு சில வாரங்களுக்குள் இடைநிலை சிகிச்சை மையமாக மாற்றியமைத்தனர்.