Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2021 15:00:43 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அண்மையில் மத்திய தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள 12 வது படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை அலகுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, 12 வது படைப்பிரிவு தலைமையகத்தின் நுழைவாயிலில் 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டதோடு, படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதனைடுத்து, மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதோடு, தனது வருகையை குறிக்கும் வகையில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார். அதனையடுத்து படையினருக்கான உரையை நிகழ்த்திய தளபதி தேநீர் விருந்துபசாரத்தின் நிறைவில் விருந்தினர் பதிவேட்டில் எண்ணப் பகிர்வுகளை குறிப்பிட்டார்.

பின்னர் அவர் 122 வது பிரிகேட் , 23 வது கஜபா படையணி மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படைமுகாம் ஆகியவற்றிற்கும் 121 வது பிரிகேட், 20 வது இலங்கை சிங்கப் படை மற்றும் 18 வது கெமுனு ஹேவா காலாட் படை ஆகியவற்றுக்கும் விஜயம் மேற்கொண்டார்.

மேற்படி அனைத்து நிகழ்வுகளும் சுகாதார வழிகாட்டுதல்களைக் பின்பற்றி முன்னெடுக்கப்பட்டதுடன். மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள் மற்றும் குறித்த படை அலகுகளின் கட்டளை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.