Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2021 18:00:43 Hours

முல்லைத்தீவு தளபதி 66 வது படைப்பிரிவு கட்டளை பகுதிகளுக்கு விஜயம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய சனிக்கிழமை (7) 66 வது படைப்பிரிவு தலைமையகம் மற்றும் அதன் பிரிகேட்கள் மற்றும் படை அலகுகளுக்கு தனது முதல் களப்பயணத்தை மேற்கொண்டார்.

பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு 24 விஜயபாகு காலாட் படை படைப்பிரிவினரால் பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தளபதியின் தனது முதல் வருகையை நினைவூட்டும் முகமாக வளாகத்தில் மரக்கன்றினை நாட்டி வைத்ததுடன் குழு புகைப்படத்திலும் தோன்றினார்.

பின்னர் 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க 66 வது படைப்பிரிவின் பொறுப்புக்கள் , வகிபங்குகள் பங்கு மற்றும் பணிகள் குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி 66 படைப்பிரிவின் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினருக்கு உரையாற்றினார்.

பின்னர், பாதுகாப்பு படை தலைமையக தளபதி படைப்பிரிவின் வடக்கு எல்லையான சங்குப்பிட்டியை பார்வையிட்டார். பின்னர் 24 விஜயபாகு கலாட் படை VIR முகாம் மற்றும் கொம்மாந்துறையினையும் பார்வையிட்டார். மேலும், அவர் புதிதாக திறக்கப்பட்ட 720 படைத் தளத்தை 661 வது பிரிகேட் தலைமையகம் மற்றும தெற்கு எல்லைக்கு செல்கையில் பார்வையிட்டார். நாச்சிகுடா பகுதிக்குச் சென்று 66 வது பிரிகேட் வளாகத்தில் சேதன பசளை தயாரிப்பதற்காக சமீபத்தில் அறிமுக்படுத்தப்பட்ட பலநோக்கு இயந்திரத்தை ஆய்வு செய்ததுடன் அரசபுரக்குளம் படையலகு பயிற்சி பாடசாலை மற்றும் 5 (தொ) இயந்திரவியல் காலாட்படை முகாம் என்பவற்றிக்கும் விஜயம் செய்தார்.

இந்த நிகழ்ச்சிகளின் போது 66 வது படைப்பிரிவின் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் பங்குபற்றினர்.