Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th August 2021 07:00:34 Hours

மேஜர் ஜெனரல் சந்தன குமார ஹந்துன்முல்ல அவர்களுக்கு பிரியாவிடை அணிவகுப்பு கௌரவம்

தேசத்திற்கு ஒரு முன்மாதிரியான சேவையை வழங்கிய இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி தனது பெருமை மிக்க மகன்களில் ஒருவருக்கு விடைகொடுத்தது. அதன்படி இராணுவத்தின் நிதி முகாமைத்துவம் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதியாகவிருந்து ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் சந்தன குமார ஹந்துன்முல்ல அவர்களுக்கு பனாகொடயிலுள்ள இலங்கை இராணுவ பொது சேவைப் படையின் தலைமையகத்தில் சனிக்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வின் போது கௌரவம் வழங்கப்பட்டது.

ஓய்வுபெறும் தளபதியினை மேஜர் ஜெனரல் சந்தன குமார ஹந்துன்முல்ல, படையணியின் அனைவரின் சார்பாகவும் பிரிகேடியர் ஏ.எம்.அபிசிங்கவால் அன்புடன் வரவேற்பளிக்கப்பட்டதோடு, பாதுகாவலர் அறிகையிடல் மரியாதையினை தொடர்ந்து போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனையடுத்து இராணுவ மரபுகளுக்கு அமைவாக படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதன்போது பேரவை உறுப்பினர்கள், படையணியின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.