05th August 2021 20:04:30 Hours
இராணுவத்தினடமிருக்கும் தனியார் காணிகள் 1991 ஆம் ஆண்டு முதல் விடுவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு கிராண் பகுதியில் இருந்து உத்தியோகபூர்வமாக பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், 2 நில பரப்புகள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைய செவ்வாய்க்கிழமை (3) விடுவிக்கப்பட்டன.
231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி அவர்களின் வழிகாட்டலுக்கமைய கும்புறுமுல்ல பகுதியிலுள்ள 4 வது கெமுனு ஹேவா படையினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த விடுவிப்புத் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.
23 வது படைப்பிரிவு தளபதி, 231 வது பிரிகேட் தளபதி, சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், பொலிஸார் மற்றும் அரசாங்க அதிகாரிகள், திட்டத்தின் பயனாளிகள் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன் பயனாளிகளான திரு பீ அன்னபுரம் அவர்களுக்கு சொந்தமான மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண் கிழக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் கோரலைப்பற்று தெற்கு(கிராண்) பிரதேச செயலகம் ஆகிய இடங்களிலுள்ள 5 ஏக்கர் காணி மற்றும் கோரலைப்பற்று பிரதேச செயலகத்திற்கு சொந்தமான கிராண் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, கோரலைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுள்ள 7 ஏக்கர் 2 ரூட் 22 பேர்ச்சஸ் பரப்பளவிலான தனியார் காணிகளை விடுவிப்பதற்கான பத்திரங்கள் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டன.