05th August 2021 20:07:38 Hours
கண்டி போதனா வைத்தியசாலை மற்றும் மாத்தளை தள வைத்தியசாலை ஆகியவற்றில் நோயாளிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு, 11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே அவர்களின் தலைமையில் படையினரால் செவ்வாய்க்கிழமை (27) கண்டி திரித்துவ கல்லூரியில் இரத்த தானம் வழங்கப்பட்டது.
மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவாவின் 81 வது பிறந்த நாளினை முன்னிட்டு 11 வது படைப்பிரிவின் கீழ் உள்ள பிரிகேட் படைப்பிரிவு, பயிற்சி கல்லூரிகள் மற்றும் படையணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் ஆகியோரால் இரத்த தானம் வழங்கப்பட்டதோடு கண்டி திருத்துவ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் அவரது நினைவு தினத்தையிட்டு இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.