Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th August 2021 08:29:11 Hours

சந்தஹிரு சேய தூபியில் வைக்கப்படவுள்ள சூடாமாணிக்கம் 48 விகாரைகளில் வணக்க வழிபாடுகளுக்காக காட்சிப்படுத்தல்

அனுராதபுரம் சந்தஹிரு சேயவின் தூபியின் மீது சூடாமாணிக்கத்தை வைப்பதற்கான பணிகள் இறுகட்டத்தில் உள்ள நிலையில் மேற்படி சூமாமாணிக்கமானது மகா சங்கத்தின் ஆசிர்வாதங்கள் மற்றும் மலர் பூஜைக்கு மத்தியில் கங்காராமய விகாரைக்கு இன்று (5) மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

மேற்படி சூடா மாணிக்கத்தை அனுராதபுரத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (08) க்குப் பின்னர் நாடளாவிய ரீதியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க 18 மாவட்டங்களிலுள்ள 48 விகாரைகளுக்கு வாகன அணிவகுப்பில் கொண்டு செல்லப்படவுள்ளது.இவ்வாறு 47 நாட்களாக கொண்டுச் செல்லப்பட உள்ளதுடன் இந்த திட்டத்தின் முடிவின் உந்துசக்தியான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்களுடன் அமைச்சுகளின் செயலாளர்கள் ,பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கடற்படை தளபதி மற்றும் விமானப்படை தளபதி, திருமதி கமால் குணரத்ன , திருமதி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி சுஜீவா நெல்சன், புத்தசாசன விவகார ஆணையாளர் மற்றும் பல சிரேஸ்ட அதிகாரிகளும் வழிபாடுகளில் இணைந்துகொண்டனர். ஹுனுப்பிட்டிய கங்காராமய விகாரையின் பதில் மகாநாயக்கர் வண. கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரேர் , வண. பேராசிரியர் மேதகொட அபேதிஸ்ஸ நாயக்க தேரர் உள்ளிட்ட தேரர்களால் மத அனுட்டானங்கள் நிகழ்த்தப்பட்டன.

தூபியின் கூம்பக கோபுரத்தின் உச்சியில் வைக்கப்படவுள்ள சூடா மாணிக்கத்தை வழங்கி வைத்த மேற்படி கட்டுமானத்திற்கான நன்கொடையாளரான பிரபல்யமான தொழிலதிபர் திரு ஆத்ர் சேனாநாயக்க அவர்கள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டார்..