Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th August 2021 16:17:57 Hours

கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு படை பிரதேசத்தில் கிராம மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கல்

மின்னேரியாவில் அமைந்துள்ள பட்டுஓயா அசோகராம விகாரையின விகாராதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க , கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்ன அவர்களின் ஏற்பாட்டில் கொவிட் -19 காரணமாக பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த நன்கொடையானது நிதியுதவியாளர்களான மொபிடெல் தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டதுடன் மற்றும் அந்த உலர் உணவு பொதிகள் மின்னேரியாவில் உள்ள படுஓயா அசோகராம விஹாரைக்கு அழைக்கப்பட்ட அப் பிரதேசத்தின் 25 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தலைமை பொறுப்பாளர் பயனாளிகளின் ஆதரவுடன் குறித்த விநியோக செயற்பாடுகளுக்கான ஏற்பாடு செய்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி விஹாரை உறுப்பினர்கள், சில அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.