Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th August 2021 16:15:57 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் புதிய தளபதியாக பிரிகேடியர் அனில் இலங்ககோன் கடமைகளை பொறுப்பேற்பு

பிரிகேடியர் அனில் இலங்ககோன் திங்கட்கிழமை (02) பொல்ஹேன்கொடவிலுள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 10 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வருகை தந்த தளபதிக்கு இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் லக்ஸ்மன் பமுனுசிங்க அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டதுடன் பிரதான நுழைவாயில் வைத்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் கௌரவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் இடம்பெற்ற மத ஆசிர்வாதங்களை தொடர்ந்து பிரிகேடியர் அனில் இலங்ககோன் புதிய நியமனத்தை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.

இந்த நிகழ்வில் படையணியின சிரேஷ்ட அதிகாரிகள் , கட்டளை அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி அணியினரும் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி நிகழ்வில் கலந்துகொண்டனர்.