03rd August 2021 20:04:43 Hours
ஊடக அறிக்கை
கடல்சார் பாதுகாப்பு தொடர்பான 5 வது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாடு ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இணையவழி தொழில்நுட்பம் மூலம் கொழும்பு இராணுவ தலைமையகத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்றது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான மாநாடாக கொழும்பு பாதுகாப்பு மாநாடு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 2011 ஆம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா முப்படை அதிகாரிகள் பிரதிநிதிகளுடன் இணைந்து இந்த மாநாட்டினை பிரதிநித்துவப்படுத்துகிறார். (முடிவு)