Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2021 16:00:28 Hours

241 வது பிரிகேடினரால் நன்னீர் பகுதிக்குள் கடல் நீர் புகுவதை தடுப்பதற்கான திட்டங்கள் முன்னெடுப்பு

காய்கறிகள் மற்றும் உணவுப் பயிர்களின் உற்பத்தி, நெல் வயல்களுக்குத் அவசியமான நீர் வழங்கல் மற்றும் குடிநீர் தேவைக்கான உப்பு கலக்காத நீர்ப்பாசன திட்டம் என்பவற்றிற்காகன நீரோந்து பிரதேசத்தை கட்டமைக்கும் பணிகளுக்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் கட்டிட நிர்மாண திட்டம் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் கீழுள்ள 241 வது பிரிகேட்டின் பொறியியல் படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிய்யூ.பீ.ஜே.கே விமலரத்ன அவர்களின் முயற்சியால் பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள ஆலையடிவேம்பு தம்பெட் பாலம் வழியாக நன்னீர் பகுதிகளுக்குள் கடல் நீர் புகுவதை தடுக்கும் திட்டம் மாவட்ட செயலகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நன்னீர் பகுதிகளில் கடல் நீர் புகுவதை தடுக்கக்கூடிய நீரோந்து பிரதேசம் தற்போது கட்டமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளின் பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வாக வீதியருகில், குடிநீருக்காக நன்னீரை நம்பியிருக்கும் பொது மக்கள் மற்றும் உற்பத்திச் செயற்பாடுகள் என்பவற்றுக்கு அவசியமான நீரேந்து பிரதேசத்துக்கு கடல் நீர் நுழைவதை மேற்படி திட்டத்தினூடாக தடுக்க முடியும்.

கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத், மாவட்டச் செயலக அதிகாரிகளுடன் சில நாட்களுக்கு முன்பு கட்டுமான பணிகள் இடம்பெறும் பகுதிக்கு நேரடியாகச் சென்று திட்டத்திற்கு தனது ஆதரவையும் வழங்கினார்.

இத்திட்டம் நிறைவடைந்ததும், அந்தப் பகுதியில் உள்ள பெருமளவான பொதுமக்கள் பயனடைவார்கள் . இத்திட்டத்திற்கு மேலதிகமாக வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் 241 வது பிரிகேடினரால் ஆலையடிவேம்பு பகுதியில் மீன் வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு வி பபாகரனும் மீன் வளர்ப்பு திட்டத்தை ஆரம்பிக்கும் பகுதிக்கு வருகைத் தந்து மேற்பார்வை செய்ததோடு, அன்றைய தினத்திலேயே ஆலையடிவேம்பில் உள்ள வறிய மக்களுக்கு குறித்த திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.