Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2021 12:10:44 Hours

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3,565 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

இன்று காலை (01) இலங்கையில் 2,177 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 275 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள். ஏனைய 2,150 நபர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபடியாக கம்பஹா மாவட்டத்தில் 441 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், களுத்துறை மாவட்டத்தில் 389 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 158 பேரும் பதிவாகியுள்ளனர். மீதி 1,162 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் -19 பரவுவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை (01) வரை இலங்கையில் மொத்தம் 308,838 கொவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 198,906 பேர் புத்தாண்டுக்குப் பின்னர் இணங்காணப்பட்டவர்கள்.

இன்று (01) அதிகாலை 0600 மணி வரை 1,906 பேர் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று (01) ஹோட்டல்கள் மற்றும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் 66 தனிமைப்படுத்தல் மையங்களில் 3,565 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று (31) அதிகாலை 0600 மணி வரை (கடந்த 24 மணி நேரத்தில்) 795 பேர் 19 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தனிமைப்படுத்தல் நிறைவின் பின் வீடு திரும்பினர்.

ஜூலை (30) ம் திகதி வரை இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆகும் அவர்களில் 25 பெண்களும் 36 ஆண்களும் உள்ளடங்குவர்.