Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2021 23:25:57 Hours

பரா ஒலிம்பிக் - 2021 போட்டிகளில் பங்குபற்றும் மாற்று திறனாளி இராணுவ வீரர்கள்

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் 2021 போட்டிகளில் இலங்கை சார்பில் போட்டியிடுவதற்காக மாற்று திறனாளியான இலங்கையின் முதல்தர சக்கர நாற்காலி டென்னிஸ் வீரரான சார்ஜன் டீஎச்ஆர் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அரிய வாய்ப்பு இலங்கையின் சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர் ஒருவருக்கு மூன்றாவது தடவையாக கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி வீரர் 2009 மே மாதத்திற்கு முன்னர் வட கிழக்கில் இடம்பெற்ற மனிதாபினமான நடவடிக்கையின் போது இடது முழங்காலுக்கு கீழ் பகுதியை இழந்தார். காயமடைந்திருந்ததோடு, இருப்பினும் அவர் 2010 ஆம் ஆண்டிலிருந்நு சக்கர நாற்காலி டென்னிஸ் வீரராக விளையாடத் ஆரம்பித்தார்.

அவரது மன உறுதிமிக்க தீர்மானம், பற்று மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக அவர் இலங்கையில் முதல்நிலை ஊனமுற்ற டென்னிஸ் வீரராக உருவெடுத்தார். அதனால் கடந்த சில ஆண்டுகளில் பல சர்வதேச அளவிலான போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

2018 மற்றும் 2019 ஆண்டுகளில், சார்ஜென்ட் டீஎச்ஆர் தர்மசேன சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டிகளில் பிரகாசித்து உலக தரவரிசையை பட்டியலில் 38 வது இடத்திற்கு முன்னேறியிருந்தார். இது உள்நாட்டு சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர் ஒருவர் வெளிப்படுத்திய மிகச் சிறந்த சாதனையாகும். அத்தோடு சர்வதேச டென்னிஸ் சபையின் தரப்படுத்தல் இந்த வருடத்தில் டோக்கியோவில் இடம்பெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இலங்கையின் முன்னனி சக்கர நாற்காலி டென்னிஸ் வீரருக்கு பெற்றுக்கொடுத்தது.

அவர் 2018 இல் ஆசிய பாரா விளையாட்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பதோடு மலேசிய லபுவான் திறந்த சக்கர நாற்காலி டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் திறந்த இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அத்தோடு மலேசியா கோலாலம்பூரில் இடம்பெற்ற திறந்த ஒற்றையர் டென்னிஸ் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவ்வாறு ஒற்றையர் சுற்றில் வௌ்ளிப் பதக்கத்தையும் 2018 திறந்த இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்று சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் தரவரிசையில் 62 இடத்தில் உள்ளார்.

சார்ஜன் டிஎச்ஆர் தர்மசேன தனது அடிப்படை பயிற்சியை நிறைவு செய்துக் கொண்டதன் பின்னர் 2007 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தில் இணைந்தார் பின்னர் 11 வது இலங்கை பீரங்கிப் படையில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.