Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2021 13:56:28 Hours

கள பொறியாளர்கள் மேலும் 4 குளக்கட்டுக்கள் புனரமைப்பு

அதிமேதக ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் "செழுமையின் ,அறுவடை" மற்றும் "நீர் செழுமை" திட்டங்களின் ஓர் அங்கமாக இராணுவத்தின் தலைமை கள பொறியியலாளர் மற்றும் பொறியியலாளர் படைப்பிரிவின் தளபதியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் 200 குளங்களை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் இலங்கை பொறியியலாளர்களின் கள பொறியாளர் பிரிகேட் சிப்பாய்களால் வெலியோயாவிலுள்ள மகாவலி-எல் வலயத்தின் 4 நீர்த் குளங்கள் புனரமைக்கப்பட்டன.

அதன்படி சஹன குளம், ஹன்சவில குளம், கம்பிலி குளம், வேஹெர குளம் உள்ளிட்ட 4 குளக்கட்டுக்களில் பாசான்கள் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றி தூய்மையாக்கள் பணிகளை மேற்கொண்டனர். இத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக பயன்படுத்தப்படும் இராணுவ இயந்திரங்களின் எரிபொருள் பாவனைக்கு அவசியமான 3.4 மில்லியன் ரூபாய் தொகையை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்படி 4 குளக்கட்டுக்கள் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட பின்னர் அதனால் இப்பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு மேற்படி நான்கு குளங்கள் புனரமைக்கப்பட்ட பின்னர் அடுத்த ஆறு குளங்களை புனரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேற்படி திட்டம் தள பொறியியலளர் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுராத செனவிரத்ன மற்றும் 11 வது கள பொறியியலாளர் படையணியின் கட்டளை அதிகார லெப்டினன் கேணல் கேகேபீ புஸ்ஸவெல ஆகியோரால் மேற்பார்வை செய்யப்பட்டது.