Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th July 2021 18:00:38 Hours

மொரட்டுவ நிதியுதவியாளர்கள் வன்னிக்குச் சென்று உலர் உணவு பொதிகள் வழங்கல்

மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில் '1983-87' இன் பழைய மாணவர் குழுவினரால் வழங்கப்பட்ட நிதியுதவியில் நெடுங்கேணி ஒலுமடு, சேனைபிலவு, கொக்கிலி, பரசங்குளம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வாழ்வாதாரத்தால் பின் தங்கிய குடும்பங்கள் மற்றும் கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைக்கு இணங்க 100 உலர் உணவு பொதிகள் சனிக்கிழமை (24) விநியோகிக்கப்பட்டது.

இந்த திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் பங்கேற்புடன், 56 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில அவர்ளின் முன்மொழிக்கு அமைய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஆரம்பமானது.

திசார பெரேரா, திரு வசந்த பெரேரா, திரு நயனா ஜயந்த, திரு பிரசாத பீரிஸ், திரு காமில் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி ரம்புக்கன உள்ளிட்ட நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள், , 56 வது படைப்பிரிவு தளபதி, 561, 562 மற்றும் 563 பிரிகேட்களின் தளபதிகள், சிவில் விவகார அதிகாரிகள் , கட்டளை அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் விளாத்திகுளம் கிராம சேவகர் திரு எம் தனுஷன் ஆகியோர் இந்த நன்கொடை திட்டத்தில் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டன.