Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th July 2021 19:00:38 Hours

வெலியோயாவிலுள்ள விகாரைகளுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு

கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் வழங்கிய நன்கொடையை கொண்டு 621 வது பிரிகேட்டின் 14 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினரால் உலர் நிவாரண பொதிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. தலா 5500/= பெறுமதியான மேற்படி பொதிகள் வெலியோயாவிலுள்ள 621 பிரிகேடுக்குட்பட்ட பகுதியிலுள்ள 10 விகாரைகளுக்கு திங்கட்கிழமை (19) வழங்கப்பட்டன.

62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 621 வது பிரிகேட் தளபதியின் ஏற்பாட்டில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது 621 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கீர்த்தி பெரகும், சிவில் விவகார அதிகாரிகள், 14 வது இலேசாயுத காலட் படையின் கட்டளை அதிகாரி மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.