Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th July 2021 18:34:55 Hours

எயார் மொபைல் பாடநெறியை நிறைவுசெய்த மேலும் 200 பட்டதாரிகள் பட்டங்களை பெற்றனர்

“ரிசர்வ் ஸ்ட்ரைக் போர்ஸ்” தொடர்பாக நன்கு பயிற்சிகளை பெற்றுக்கொண்டவர்களும் பாடநெறி இல 23 ஐ நிறைவு செய்தவர்களுமான 4 அதிகாரிகளுக்கும் 196 இராணுவச் சிப்பாய்களுக்குமான பட்டமளிக்கும் நிகழ்வு , நிக்கவெவவிலுள்ள 53 வது படைப்பிரிவு தலைமையகத்தின் கீழ் உள்ள எயார் மொபைல் பயிற்சி கல்லூரியில் புதன்கிழமை (28) காலை வைபவ ரீதியான இடம்பெற்றது . இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துகொண்டதோடு உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி குறித்த நிகழ்வு நடத்தப்பட்டது.

நிகழ்வின் பிரதம அதிதி வருகை தந்த போது பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. பட்டதாரிகளின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து 53 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, எயார் மொபைல் பிரிகேட் தளபதி கேணல் சுபாஷ் சஞ்சீவ மற்றும் எயார் மொபைல் பயிற்சி கல்லூரியின் தளபதி எம்ஏடிஆர் மங்கள ஆகியோர் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு வரவேற்பளித்தனர்.

அதன் பின்னர் பிரதம விருந்தினர் 53 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, 53 வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி எம்ஏடீஆர் மங்கள, நடமாடும் சேவை பிரிகேட் தளபதி ஆகியோரால் பிரியாவிடை பெறும் பட்டதாரிகளுக்கான பட்டங்களை வழங்கி வைத்ததோடு, இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் சேனா வடுகே, மற்றும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு ஆகியோரால் ஏனைய பட்டதாரிகளுக்கான பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைடுத்து பாடநெறி எண் 23 இல் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க பிரதம விருந்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் படி பாடநெறியில் சிறந்து விளங்கியவருக்கான விருது இலங்கை சிங்கப் படையணியின் 2 ஆம் லெப்டினன் எம்டீபீஎன் மதுசங்கவுக்கு வழங்கப்பட்டதுடன் சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரராக இலங்கை இசோயுத காலாட் படையணியின் கோப்ரல் ஏஎச்எஸ் மதுசங்க தெரிவு செய்யப்பட்டார். அத்தோடு சிறந்த உடற் தகமை கொண்ட வீரராக கோப்ரல் பீஜீடபிள்யூ ஜயந்த தெரிவு செய்யப்பட்டதோடு, அனைவரினதும் கைத்தட்டல்கள் மற்றும் பாரட்டுக்களுக்கு மத்தியில் அவர்கள் இராணுவ தளபதியிடமிருந்து விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையொன்றை நிகழ்த்தியிருந்ததுடன் பட்டதாரிகளுக்கான பயிற்சியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அத்தோடு நிகழ்விற்கு அழைப்பு விடுத்த எயார் மொபைல் பயிற்சி கல்லூரிக்கு நன்றிகளை தெரிவித்த தளபதி, எயார் மொபைல் பயிற்சி கல்லூரியின் வரலாறு தொடர்பாக எடுத்துரைத்திருந்துடன் நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக கல்லூரி வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார். (தளபதியின் முழுமையான உரையை கீழே பார்வையிடலாம்)

பின்னர் பயிற்றுவி்ப்பாளர், பட்டதாரிகள், எயார் மொபைல் பயிற்சி கல்லூரியின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோருடனான குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விற்கு தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு, பட்டதாரிகள் மற்றும் பயிற்றுவி்ப்பாளர்களின் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

அதனையடுத்து எயார் மொபைல் பயிற்சி கல்லூரியின் புதிய தலைமையக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வைக்குமாறு தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னர் கல்லூரியின் பயிற்சி தளங்களை மேற்பார்வை செய்த தளபதி கல்லூரி வளாகத்தில் சந்தன மரக் கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.

அதனையடுத்து அங்கு கட்டமைக்கப்பட்ட மாதிரி போர்க் களத்தை தளபதி பார்வையி்ட்டதுடன் எயார் மொபைல் பயிற்சி கல்லூரியின் பட்டதாரிகள் மற்றும் 53 வது படைப்பிரிவினர் தங்களது விசேட திறமைகளையும் வெளிப்படுத்தினர். அத்தோடு பெல் 212 ரக ஹெலிகொப்டர்கள், விரைவு போர் நடவடிக்கை காட்சிகள், நிராயுதபாணியாக போரிடுதல், போர்க்கள கட்டுப்பாட்டு நுட்பங்கள், அதிரடி நடவடிக்கைகளுக்கான நுட்பங்கள் தொடர்பிலான விடயங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

நிகழ்வுகள் இடம்பெற்ற தினத்தின் நிறைவம்சமாக “சீரோ விண்ட்” 200 மீ துப்பாகிச்சுடுதலில் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதை தொடர்ந்து பிரதம விருந்தினருக்கான நினைவு பரிசு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விருந்தினர் பதிவேட்டில் பிரதம விருந்தினர் எண்ணப் பகிர்வுகளை பதிவிட்டார்.

இந்நிகழ்வில் படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள் கட்டளை அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி அணியினரும் கலந்துகொண்டனர்.