Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd July 2021 13:00:26 Hours

52 வது படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில் ஏழைகளுக்கு நிவாரண பொதிகள் விநியோகம்

யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 52 வது படைப்பிரிவினால் அரியாலை பகுதியில் வசிக்கும் 55 குறை வருமானம் பெறும் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் புதன்கிழமை (30) விநியோகிக்கப்பட்டன.

அப்பகுதியை சேர்ந்த நன்கொடையாளர் ஒருவரால் மேற்படி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன.

யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டலுக்கமைய 52 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் ஒருங்கிணைப்பில் அரியாலை 'சர்வோதய' நிலையத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

52 வது படைப்பிரிவு தளபதி, மதகுருமார்கள், கிராம சேவகர்கள் ஆகியோர் விநியோக திட்டத்தில் கலந்துகொண்டனர்.