Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd July 2021 10:15:26 Hours

கிளிநொச்சி படையினரால் பொதுமக்களுக்காக ஆறு புதிய வீடுகள் நிர்மாணிப்பு

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தினரால் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் தேவையுடைய மக்களுக்கான ஒரு வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டமானது 66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த 6 வீடுகளின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திட்டமானது இராணுவத் தளபதியால் அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையங்களில் கிராம மட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் நலனுக்காகவும் சமுகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

661 வது பிரிகேட் தளபதி கேணல் தீப்த ஆரியரத்ன, 662 வது பிரிகேட் தளபதி கேணல் சமிந்த லியனகே மற்றும் 663 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுபாசன லியனகம ஆகியோரின் மேற்பார்வையில் 20 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணி, 24 வது விஜயபாகு காலாட்படையணி,11 வது (தொண்) கஜபா படையணி,20 வது (தொண்) விஜயபாகு காலாட்படையணி 5 வது (தொண்) இயந்திர காலாட் படையணி மற்றும் 2 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையணி ஆகியவற்றின் படையினரின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைத் பயன்படுத்தி நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.