Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st July 2021 18:27:42 Hours

நுரைச்சோலையில் தனிப்பட்ட தகராருடன் தொடர்புடைய சிப்பாய் கைது

நுரைச்சோலை பணியடி பிரதேசத்தில் இரு குடும்பங்களுக்கிடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த முரண்பாடுகளுடன் தொடர்பு பட்டதாக விசாரணைகளின் போது உறுதி செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் நுரைச்சோலை பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேற்படி விவகாரத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான அனைத்து உதவிகளையும் இராணுவ பொலிஸ் படையணி வழங்கியுள்ள நிலையில் இராணுவ சீருடையில் சென்ற குழுவொன்றினால் பாதிக்கப்பட்ட நபரை அவருடைய வீட்டிலிருந்து வேன் ஒன்றின் மூலம் கடத்தி வந்துள்ளதோடு இடை வழியில் விடுவித்துள்ளனர். இதுகுறித்த விசாரணைகளின் போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஆதாரங்களும் திரட்டப்பட்டுள்ளன.

குறித்த சிப்பாய் இரு குடும்பங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினைகளை தூண்டியதாக முதற்கட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.