Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th June 2021 11:00:22 Hours

சர்வதேச விளையாட்டரங்கில் இராணுவ வீரர்கள் பிரகாசிப்பு

அண்மைய காலமாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் ஆசிர்வாதத்துடன் இராணுவ விளையாட்டு வீரர்கள் பலருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்கும் வாய்ப்புகள் கிடைத்திருந்தது. இதனால் நாட்டிற்கும் நற்பெயர் கிடைத்துள்ளது.

டோஹா கட்டாரில் தற்போது இடம்பெற்று வருகின்ற 76 வது செஸ்மி ஞாபகார்த்த தடகள செம்பியன்ஸிப் போட்டியில் புதன்கிழமை (23) நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றிய 5 வது இலங்கை இராணுவ மகளிர் படையின் சாதாரண சிப்பாய் எஸ்.எல்.எஸ் சில்வா (சராங்கி) நீளம் பாய்தல் போட்டியில் 6.44 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் 2019 ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இலங்கை மின்சார இயந்திர பொறியியல் படையின் லான்ஸ் கோப்ரல் எல்.ஜி.எஸ்.தனஞ்சய 76 வது செஸ்மி ஞாபகார்த்த தடகள செம்பியன்ஸிப் போட்டியில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 7.78 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கம் வென்றார்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும், இலங்கை இராணுவ தடளச் சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க இது போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுத்தருமாறு தளபதியிடம கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.