Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st July 2021 10:14:56 Hours

இராணுவத்தின் வேண்டுகோளின் பேரில் பௌத்த பிக்குகளால் ஒட்டுச்சுட்டான் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகம்

தெற்கில் வசிக்கும் பெளத்த பிக்குகளின் ஆதரவு மற்றும் நிதியுதவியுடன் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பகுதியில் வசிக்கும் மிகவும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு 250 உலர் உணவு பொதிகள் திங்கட்கிழமை (28) 64 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன அவர்களின் முயற்சியால் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவு படையினரின் உதவியுடன் விநியோகிக்கப்பட்டன.

வண. தலல்லே சந்தகீத்தி நாயக தேரர் அவர்களால் கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஸ்ரீ நாரத பௌத்த நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குதாரர்களின் ஆதரவோடு தலா ரூபா 4500.00 பெறுமதியான சுமார் 1.2 மில்லியனுக்கு உலர் உணவு பொதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பிரதேச செயலகத்தினரின் ஒருங்கிணைப்பில் ஒட்டுசுட்டானில் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கபட்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வணக்கத்திற்குரிய தலல்லே சந்தகீத்தி தேரர், வண. வத்தேகம நிபூன தேரர்,மதவச்சி மகாதகல ரஜ மஹா விஹாரையின் தலைமை தேரர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய, 642 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஷிக பெரேரா மற்றும் அரச அதிகாரிகளுடன், சில சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் இந்த விநியோக நிகழ்வில் கலந்து கொண்டனர்.