Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th June 2021 23:48:17 Hours

மறைந்த சிரேஸ்ட அதிகாரியின் மகளினால் இடைநிலை சிகிச்சை நிலையங்களுக்கு நிவாரண பொதிகள் அன்பளிப்பு

613 வது பிரிகேடின் 9 வது கெமுனு ஹேவா படையினர் மற்றும் 14 வது கெமுனு ஹேவா படையினர் ஒன்றிணைந்து கட்டமைத்த அக்மீமன மற்றும் கரந்தெனிய இடைநிலை பராமரிப்பு நிலையங்களிலிருக்கும் நோயாளிகளுக்கு சுகாதார துறையினருடன் இணைந்து உலர் நிவாரண பொதிகள் வௌ்ளிக்கிழமை (25) வழங்கப்பட்டன.

மேற்படி நோயாளர்களுக்கான நன்கொடை மறைந்த மேஜர் ஜெனரல் கே.ஹமங்கொட அவர்களின் மகளினால் வழங்கப்பட்டதுடன் அவர் 1996 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிர் நீத்தார். மேற்குறிப்பிட்ட இரண்டு இடைநிலை பராமரிப்பு நிலையங்களுக்கும் வருகை தந்த நன்கொடையாளர் அன்பளிப்புக்களை படையினரிடம் ஒப்படைத்தார்.

61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே அவர்களினால் மேற்படி நன்கொடைத் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதுடன், 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு அவர்களின் மேற்பார்வையில் படையினரால் திட்டம் செயற்படுத்தப்பட்டது.