Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2021 14:00:39 Hours

படையினரால் வவுனியா நகரம் தொற்று நீக்கம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில ஆகியோரின் பணிப்புரைக்கமைய 562 பிரிகேட் படையினர் வவுனியா நகரம் மற்றும் நகரிலுள்ள பொது இடங்களில் கொவிட் – 19 வைரஸ் காரணமாக தொற்று நீக்கம் செய்தனர்.

இந்நிகழ்வு 562 பிரிகேட் தளபதி பிரிகேடியர் சேனக பிரேமவன்ச அவர்களின் மேற்பார்வையின் கீழ், பொது இடங்கள், பஸ் தரிப்பிடம், புகையிரத நிலையம், நலன்புரி நிலையங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், சந்தை கட்டிடம், பொது வைத்தியசாலை, அரச மற்றும் அரசாங்கம் சாராத நிறுவனங்கள், பொது மக்கள் ஒன்று கூடுமிடங்கள் முச்சக்கர வண்டி தரிப்பிடம் உள்ளிட்ட பல பகுதிகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

17 (தொ) இலங்கை சிங்கப் படையினர் 8 வது கள பொறியியல் பிரிவுடன் இணைந்து பாதுகாப்பு கவசங்களுடன் தொற்று நீக்கம் செய்தலில் ஈடுப்பட்டனர். மாவட்ட சுகாதார பரிசோதகர் மற்றும் நகர ஊழியர்களும் இதன் போது கலந்துகொண்டனர்.