Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2021 17:00:39 Hours

66 படைப்பிரிவினரால் கடத்தல் கஞ்சா மீட்பு

66 படைப்பிரிவின் புலனாய்வு பிரிவினர் மற்றும் 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினர் ஒன்றிணைந்து 80 கிலோ கேரள கஞ்சா அடங்கிய 40 பக்கட்டுக்களை கிளிநொச்சி நல்லூர் சீதாகுடியிருப்பு பகுதியிலிருந்து வௌ்ளிக்கிழமை (25) மீட்டெடுத்தனர்.

படகொன்றும், பொலேரொ கெப் மற்றும் சட்ட விரோத மதுபானங்களையும் மீட்டுள்ளதுடன், கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த ஒருவரையும் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போதைப்பொருள் மற்றும் மது பாவனையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் தேசிய திட்டத்திற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறைக்கமைய படையினர் தங்களது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருவதுடன் போதைப்பொருள் மீட்பு மற்றும் கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.