Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2021 16:00:39 Hours

56 வது படைப்பிரிவினரால் 700 சமைத்த உணவு பொதிகள் வழங்கி வைப்பு

வவுனியா 56 வது படைப்பிரிவின் கீழ் சேவையாற்றும் படையினரால் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில அவர்களின் வழிகாட்டலுக்கமைய பொசன் பௌர்ணமி தினத்தில் (24) வவுனியாவிலுள்ள வறிய குடும்பங்களுக்கு 700 சமைத்த மதிய உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா மாவட்டத்தின் ஒரு சில கனவாண்கள் மற்றும் நன்கொடையாளர்கள், வழங்கிய ஒத்துழைப்புடன் கொவிட் -19 தொற்றுநோய் பரவல் காலத்தில் பொது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில்கொண்டு இந்த புனித நாளில் தேவையுடைய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.