Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2021 15:00:39 Hours

கெமுனு ஹேவா படையினரால் மட்டக்களப்பில் உலர் உணவு பொதிகள் விநியோகம்

பொசன் பௌர்ணமி தினத்தன்று (24) மட்டக்களப்பு கிராண் பகுதியில் வசிக்கும் 45 வறிய குடும்பங்களுக்கு 231 வது பிரிகேட்டின் 4 வது கெமுனு ஹேவா படையினரால் இலவச உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி, 4 வது கெமுனு ஹேவா படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எல் ஜயசிங்க ஆகியோரின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வருமான வழிகளை இழந்தவர்களின் குடும்பங்கள் தொடர்பான விபரங்கள் கிராம சேவகர் ஊடாக அறியப்பட்டு கெமுனு ஹேவா படையினரால் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி நிவாரண பொதியில் அரிசி, பருப்பு, நெத்தலி, மசாலா வகைகள், தானியங்கள். பால் மா உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்கியிருந்துடன், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 23 வது படைப்பிரிவு ஆகியவற்றின் ஆதரவும் இத்திட்டத்துக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.