20th June 2021 04:00:43 Hours
செவ்வாய்க்கிழமை (22) ஒரு முறையான பிரியா விடை நிகழ்வுகளோடு வெளியேறும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவுக்கு இராணுவ மரபுகளுக்கு இணங்க பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை . இராணுவ முறையிலான பிரியா விடை என்பன முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகம் வளாகத்தில் வழங்கப்பட்டன.
12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் படையினரால் வழங்கப்பட்ட பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் சில சிப்பாய்களின் முன்னிலையில் தனது அவுவலகத்தை கைவிடுவதனைக் குறிக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
பின்னர், விடைப்பெறும் மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ அவர்கள் புதிதாக கட்டப்பட்ட விளையாட்டு வளாகத்தை திறக்க அழைக்கப்பட்டார். பின்னர் படையினருக்கு உரையாற்றிய, மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தில் அவருக்கு அளித்த உதவிகள் மற்றும் ஆதரவுக்கு அனைத்து நிலையினருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இதே போன்று புதிய தளபதிக்கும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அன்றைய நிகழ்வின் முடிவில் படைப்பிரிவுகளின் தளபதிகளால் அவரது சேவைகளைப் பாராட்டி அவருக்கு சிறப்பு நினைவுச் சின்னங்கள் வழங்கினர்.
பிரியாவிடை விழாவில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக அனைத்து அதிகாரிகள், படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
புறப்படுவதற்கு முன்பு மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ 682 வது பிரிகேட் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட தலைமையக கட்டிடத்தை திறந்து வைக்க அழைக்கப்பட்டார். நடைமுறையில் உள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக நிகழ்வுகள் குறைக்கப்பட்டிருந்தன.