Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd June 2021 16:24:33 Hours

யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கர்பிணிகளுக்கு சத்துணவு பொருட்கள், உலர் உணவு பொருட்கள், குழந்தை பராமரிப்பு பொருட்கள் வழங்கல்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நிர்வகிக்கப்படும் பண்ணைகளில் பணியாற்றும் கர்பிணிப் பெண்களுக்கு செவ்வாய்க்கிழமை (22) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் அறிவுரைக்கமைய உலர் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி நிகழ்வு யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் தலைமையில் இடம்பெற்றதோடு யாழ் குடா நாட்டு பல்வேறு தூர பிரதேச கர்பிணித் தாய்மார்கள் தலைமையக வளாகத்திற்கு அழைப்பிக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அவற்றில் அரிசி, பருப்பு, சீனி, பால் மா, தேயிலை, கறுவாடு, பிஸ்கட் பெக்கட்டுக்கள், சோயா என்பன உள்ளடங்கியிருந்தன.

குறிப்பாக அவர்களுக்கு பிரசவத்திற்குப் பின்னர் பயன்படுத்தக்கூடிய குழந்தை பராமரிப்பு பொருட்கள், துடைப்பம், சுகாதாரப் பொதிகள் போன்றவையும் வழங்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறும் முன்பாக விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டனர்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி, மற்றைய சிரேஷ்ட அதிகாரிகள், படையினர் ஆகியோரும் இச்சமூகப் பணியில் பங்கெடுத்தனர்.