Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th June 2021 20:54:24 Hours

ஹோமாகமவிலுள்ள பௌத்த பல்கலைக்கழகத்திற்கு உலர் உணவு பொதிகள் விநியோகம்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இராணுவ பௌத்த சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் நடமாட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பௌத்த ஹோமகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் முடங்கியிருக்கும் மாணவ பிக்குகளுக்கான உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

மேற்படி பிக்குகளில் மியன்மார், பங்களாதேஷ். நேபாலம் மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்களும் என்பதுடன் ஹோமாகமவிலுள்ள பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து பயின்றுவரும் நிலையில் கொவிட் – 19 அச்சுறுத்தல் நிலைமை மற்றும் அமுலிலிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நெருக்கடிக்கு ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.