Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th June 2021 05:00:43 Hours

சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் தளபதியை சந்தித்து நீதிமன்ற கடமைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உயர் மட்ட பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை திங்கட்கிழமை (14) சந்தித்து தங்களது தொழில் துறை சார்ந்த சிக்கல்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

கொவிட் - 19 வைரஸ் பரவல், பயணக் கட்டுப்பாடுகள், நாடு முழுவதிலுமுள்ள இடைநிலை பராமரிப்பு நிலையங்கள், மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்பாக வினவிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் திரு சாலிய பீரிஸ் மற்றும் செயலாளர் தலைமையிலான குழுவினர், வழக்கு விசாரணைகள் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்காக சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதற்கான நீதிமன்றங்களின் கடமைகளை மீள ஆரம்பித்து குறித்து அவதானம் செலுத்துமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா நடைமுறையில் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் பொது மக்களால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மேற்படி செயற்பாட்டை முன்னெடுக்க முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்தார். அத்தோடு ஜனாதிபதியும் அரசாங்களும் மீண்டும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதை காண காத்திருப்பதாகவும், அதனால் மாற்று வேலைத்திட்டங்களுக்கான சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டு அதற்குரிய தீர்வுகள் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.