Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th June 2021 06:45:25 Hours

சிரேஸ்ட இராணுவ ஜெனரல் (ஓய்வு) சிரில் ரணதுங்க ஓய்வை எய்தினார்

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் (ஓய்வு) சிரில் ரணதுங்க அவர்களின் இறுதி சடங்குகள் (17) நண்பகல் வேலையில் பொரளை பொது மயானத்தில் அவரது குடும்ப உறுப்பினர் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடனும் நடைபெற்றது.

மறைந்த இராணுவ வீரர் மீது உயர் மரியாதையும் கௌரவமும் கொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோர் அன்னாரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து அனுதாபங்களை தெரிவித்தனர்.

குறுகிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இறுதி கிரியை நிகழ்வுகளின் போது அன்னாரின் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்கள் இராணுவ மரியாதையும் செலுத்தப்பட்டது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இந்நிகழ்வுகளில் சிரேஸ்ட அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.