Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th June 2021 21:39:47 Hours

232 வது பிரிகேட் படையினரால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 23 வது காலாட் படைப் பிரிவின் கீழ் உள்ள 232 வது பிரிகேட்டின் 12 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால், குறைந்த வருமானத்தை கொண்ட ஏழை குடும்பங்களில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த சமூக திட்டத்தின் கீழ் இரலக்குளம், வெப்பவடுவான், மைலவடுவான், குடும்பிமலை மற்றும் பெரிலவேலி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 25 கர்ப்பிணி தாய்மார்கள் நன்மையடைந்துள்ளதுடன் அவர்கள் தானியங்கள், பருப்பு, அரிசி, உலர்ந்த மீன், பால் மா மற்றும் ஏனைய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

12 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சஞ்சீவ சேனரத்ன அவர்கள் அப் படையணியின் 2- வது கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் ஆகியோர்களுடன் இணைந்து இராணுவம் மற்றும் சிவில் சமுகத்தினரிடையே நல்லிணக்கத்தை மேம் படுத்தும் முகமாக இந்த விநியோக திட்டத்தில் கலந்து கொண்டார்.