Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th June 2021 21:38:14 Hours

5 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் பாதிக்கப்பட்ட கொத்மலை கிராம மக்களுக்கு உதவி

58 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 581 வது பிரிகேட் தளபதி நிலங்க பெர்னாண்டோ அவர்களின் ஒத்துழைப்புடன் வெள்ளிக்கிழமை (11) ஆம் திகதி படையினரால் கொத்மலை கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 80 உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த திட்டமானது 5 வது விஜயபாகு காலாட்படை படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் படையினரின் மேற்பார்வையின் கீழ் மேற் கொள்ளப்பட்டது. இவ் ஒவ்வொரு பொதியிலும் ரூபா 3000 / = மதிப்புள்ள உலர் உணவுகள் பொதிசெய்யப்பட்டிருந்தன, மேலும் கொத்மலை நயபன, கடதொர மற்றும் தம்பகல்ல ஆகிய கிராமங்களில் வசிக்கும் கிராம உத்தியோகத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

அன்றாட வருமானங்களை பொற்று கொள்ள முடியாமல் பல கஷ்டங்களை எதிர் கொள்ளும் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதால் கஷ்டங்களுக்கு உள்ளாகும் மக்களுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் மேற் கொள்ளப்பட்டது.