Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2021 22:57:16 Hours

பேரழிவு நிவாரணப் பணியில் படையினர் இறந்த இளைஜர் மற்றும் புதையுண்ட பெரியவர்கள் மீட்பு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 611 வது பிரிகேட்டின் 8 வது கெமுனு ஹேவா படையினர் இன்று (4) காலை இரத்தினபுரி, தும்பறை, இஹலபொல பகுதிக்கு மண்சரிவு மற்றும் மழைக் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிகளுக்காக விரைந்தனர்.

படையினர் மழையின் மத்தியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மலையேறி, தடைகளைத் அகற்றி மண்சரிவில் சிக்குண்டிருந்த 50 வயதான ஒரு பெண்ணை மீட்டு அருகிலுள்ள கிரியெல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், படையினர் குறித்த பகுதி மற்றும் அதைச் சூழ நடத்திய தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் மண் சரிவால் புதையுண்டிருந்த 17 வயது சிறுமியின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து தேடலின் போது, 60 வயதான மற்றொரு உயிருடன் புதையுண்டவரை மீட்டனர்.

படையினர் கிராமவாசிகளுடன் ஒருங்கிணைந்து அந்த அனர்த்த நிவாரண பணிகளில் தொடர்ந்தும் ஈடுப்பட்டுள்ளனர்.