02nd June 2021 18:49:09 Hours
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா 2021 ஜூன் 7ம் திகதி பயணத் கட்டுப்பாடுகள் நீக்கப்படாது என்றும் அது 2021 ஜூன் மாதம் 14 ம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீட்டிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் கேகாலை, திருகோணமலை, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, பதுள்ளை, அனுராதபுரம், புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை, மற்றும் பொலன்னருவை ஆகிய மாவட்டங்களில் சினோபார்ம் தடுப்பூசி வழங்கல் ஜூன் 8 ம் திகதி தொடங்கும் எனவும் தெரிவித்தார்.
அந்த தடுப்பூசிகள் முதலில் சிரேஸ்ட பிரஜைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் முழு காணொளி அறிக்கையை இங்கு காணலாம் பின்வருமாறு: