Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd June 2021 15:49:59 Hours

விடைப்பெறும் ரஷ்ய பாதுகாப்பு இணைப்பாளரின் பண்பாட்டு சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் இராணுவ, வான் மற்றும் கடற்படை இணைப்பாளர் கர்ணல் டெனிஸ் ஐ ஷ்கோடா பாதுகாப்பு பதவி நிலைப் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவத் தலைமையகத்தில் தனது தனது பதவிக் காலம் முடிந்ததும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு மரியாதை நிமித்தம் இன்று காலை (2) சந்தித்தார்.

நல்லுறவு சந்திப்பின் போது வெளிச்செல்லும் தூதரக அதிகாரி இலங்கையில் தனது சேவைக் காலத்தில் கிடைத்த ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு, இராணுவத்தின் நல்ல புரிதலுக்கும் சகோதரத்துவத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை அவர்கள் நினைவு கூர்ந்தனர், மேலும் இதுபோன்ற உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். அத்தோடு சந்திப்பின் நிறைவில் நினைவுச் சின்னங்களையும் பரிமாற்றிக் கொண்டனர்.

ரஷ்ய தூதரகத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பதிகாரியும் பிரியாவிடை சந்திப்பில் கலந்துக் கொண்டார்.