28th May 2021 23:10:00 Hours
எதிர்காலத்தில் தடூப்பூசி ஏற்றப்பட்டவர்களின் விபரங்களை புதுப்பிப்பது தொடர்பான வலையமைப்பொன்றை உருவாக்குதல் தொடர்பான விசேட கூட்டமொன்றும் ராஜகிரிய கொவிட் – 19 பரவலை தடுப்புக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் அலுவலகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் 28 மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.