Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th May 2021 12:30:31 Hours

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு அலுலவலகம் படையினரால் பீசிஆர் மையமாக மாற்றப்பட்டது

கொவிட் - 19 வைரஸ் தொற்றின் 3 வது அலை உக்கிரமடைந்துள்ள நிலையில் அதனை மட்டுப்படுத்தும் முயற்சியாக ஹம்பாந்தோட்டையிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு அலுவலகம் பாதுகாப்பு படையினரால் பிசிஆர் சோதனை மையமாக மேம்படுத்தப்பட்டது.

122 வது பிரிகேடின் ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்களுடன் கலந்தாலோசித்து குறித்த பிசிஆர் மையத்தை நிறுவ நடவடிக்கை எடுத்திருந்ததோடு, 122 பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனக பல்லேகும்புர குறித்த திட்டத்தை மேற்பார்வை செய்தார். வியாழக்கிழமை (20) மேற்படி அலுவலகம் முறையாக சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்கப்பட்டது.