28th May 2021 15:35:31 Hours
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் வெள்ளிக்கிழமை (28) விடுதலை புலிகளின் கடல் புலி உறுப்பினர் ஒருவரை 2 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய சக்திவாய்ந்த கிளைமோர் குண்டை யாழ்ப்பாண நாகர் கோவில் மீன்பிடி துறைமுகத்தில் புதைத்து வைக்கப்பட்டமைக்காக கைது செய்யப்பட்டார்.
இராணுவ புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், அந்த இடத்தில் ஒரு சோதனை நடத்தப்பட்டு, முன்னாள் கடல் புலியை கைது செய்துடன் 2 கிலோ சக்திவாய்ந்த கிளைமோர் வெடிகுண்டு, டி -56 துப்பாக்கி ரவைகள் 14, 45 கைத்துப்பாக்கி ரவைகள், 12.7 வகை ரவை ஒன்று மற்றும் இரண்டு மீட்டர் நீள டெட்டனேட்டர் நூல் என்பனவும் மீட்கப்பட்டன.
வெடிபொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டார்.