Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th May 2021 11:00:31 Hours

முல்லைத்தீவு படைத் தலைமையகத்தினால் கொவிட் – 19 தடுப்பு திட்டங்கள் முன்னெடுப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் கொவிட் – 19 பரவலை தடுப்பதற்காக முல்லைத்தீவிலுள்ள பொது இடங்களிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் தொற்று நீக்கும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை (23) முன்னெடுத்தனர்.

அதன்படி 682 பிரிகேடின் 18 வது விஜயபாககு காலாட் படை, 6 இலங்கை தேசிய பாதுகாவலர் படை, பஸ் தரிப்பிடங்கள், நலன்புரி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள், பொது மக்கள் ஒன்றுகூடுமிடங்கள், முச்சக்கரவண்டி தரிப்பிடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் தொற்று நீக்கும் பணிகளை முன்னெடுத்ததுடன். இந்த திட்டம் 68 படைப்பிபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டாரா அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.

அதேநேரம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்‌ஷ, வெனாவில் மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையங்களை பார்வையிட்டார்.

68 படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார மற்றும் 68 படைப்பிரிவினர் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மேற்படி செயற்றிட்டத்தில் பங்கெடுத்தனர்.