Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th May 2021 09:35:31 Hours

வெளிகந்தையில் படையினர் இரத்த தானம்

மொனராதென்ன விகாரையின் விகாரதிபதி வணக்கத்திற்குரிய சேருபிட்டிய ஆனந்த தேரர் அவர்களின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் ஏழை நோயாளிகளின் நலனுக்காக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் ஞாயிற்றுக்கிழமை (23) வெளிகந்தை வைத்தியசாலையில் இரத்த தானம் செய்தனர்.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இத்திட்டத்தில் பங்கேற்று உரிய ஒத்துழைப்பை வழங்குமாறு படையினரை அறிவுறுத்தியிருந்தார். நாரஹேன்பட்ட மத்திய இரத்த வங்கியின் வைத்திய அதிகாரிகள் இந்த திட்டத்திற்கு உதவினர்.