Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th May 2021 20:18:31 Hours

எல்பிட்டிய பிராந்திய இடைநிலை பராமரிப்பு நிலையத்தின் கட்டமைப்பு பணிகள் தொடர்பில் தளபதி ஆராய்வு

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா சிரேஷ்ட அதிகாரிகள் சிலருடன் பிரந்திய ரீதியாக அமைக்கப்பட்டு வருகின்ற இடைநிலை பராமரிப்பு நிலையங்களின் நிர்மாண பணிகளை மேற்பார்வை செய்து வருகின்ற நிலையில் எல்பிட்டிய இதலகந்தவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இடைநிலை பராமரிப்பு மையத்தின் பணிகளை இன்று (27) மேற்பார்வை செய்தார்.

நோயாளிகளின் அதிகரிக்கும் பட்சத்தில் எந்தவொரு அவசரகால நிலைமையையும் சந்திக்க நாடு முழுவதும் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துனத்துக்கு அமைவாக சகல சுகாதார வசதிகளுடனும் கூடிய சுமார் 400-500 கட்டில்கள் கொண்ட இடைநிலை பராமரிப்பு நிலையம் எல்பிட்டிய இதலகந்தவில் இராணுவத்தினரால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கைவிடப்பட்ட நிலையிலிருந்த மேற்படி ஆடைத் தொழிற்சாலையை விரைவாக இடைநிலை சிகிச்சை நிலையைமாக மாற்றியமைப்பதற்காக தென் மாகாண ஆளுநரால் எல்பிட்டிய பிரதேச சபைக்கு 10 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் வைத்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மேம்பாட்டு பணிகள் வைத்தியசாலை ஊழியர்களின் உதவியுடன் இரு வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதன் போது 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே அவர்களினால் இராணுவ தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன், மேற்படி திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டுள்ள படையினருக்கு தளபதி அறிவுரை வழங்கியதுடன், மாகாணத்தில் ஏற்படக் கூடிய அவசர நிலைமைகளுக்கு முகம்கொடுக்க தயாராக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேற்படி நிலையத்துக்குள் நவீன வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு, தனிமைப்படுத்துதல் பிரிவுகள், மீட்பு அலகுகள், மருந்தகங்கள் அமைக்கப்படும் முதல் சிகிச்சை மையம் இதுவாகும். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இராணுவம் தயாராக இருக்கின்ற நிலையில் 3 வது அலைக்கு முகம் கொடுக்கும் நோக்கில் மேற்படி பணிகளை ஆரம்பிக்கப்பட்டன. மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களும் இதன் போது கலந்துக் கொண்டார்.

"இந்த அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, இராணுவம் இடைநிலை பராமரிப்பு மையங்கள் அல்லது வைத்தியசாலைகளாக பாவனை செய்யக்கூடிய பொருத்தமான இடங்கள் மற்றும் கட்டிடங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் தேடுதல்களை ஆரம்பித்திருந்தன் விளைவாகவே மேற்படி இடம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. நாட்டிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் கொவிட் - 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான இடம் போதாமையால் இவ்வாறான அவசர சிகிச்சை நிலையங்களை மற்றும் வைத்தியசாலைகளை நிர்மாணித்து இலங்கையர்களுக்கு இலவசமாக சேவையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக ஜெனரல் ஷவேந்திர சில்வா முன்பு அறிவித்திருந்தார்.