Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th May 2021 12:00:47 Hours

230 கட்டில்களுடன் மேலும் இரு இடைநிலை பராமரிப்பு நிலையங்கள் திருகோணமலையில்

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் கிளிவெட்டி வைத்தியசாலை மற்றும் ஹமீடியா ஆடைத் தொழிற்சாலை ஆகியவற்றை 222 வது பிரிகேட், 223 பிரிகேட் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படை, 22 வது விஜயபாகு காலாட் படையினரால் கொவிட் -19 தொற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களாக மாற்றியமைக்கப்பட்டன.

மேற்படி இரண்டு இடைநிலை பராமரிப்பு நிலையங்களில் கிளிவெட்டி வைத்தியசாலை 80 நோயாளர்களையும் ஹமீடியா ஆடைத் தொழிற்சாலை 150 நோயாளர்களையும் பராமரிப்பதற்கான கொள்ளளவை கொண்டுள்ளன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன விஜேசூரிய, 22 வது படைப்பிரிவு, 223 வது பிரிகேட் சிப்பாய்கள் சுகாதார அதிகாரிகள் வைத்தியசாலை அதிகாரிகளுடன் இணைந்து மேற்படி பணிகளை முன்னெடுத்தனர்.

மேற்படி செயற்பாடுகள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமை 22 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா , 222 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விராஜ் விமலசேன மற்றும் 223 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சாந்த பெரேரா ஆகியோரின் பங்களிப்புடன் மேற்படி செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.