Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th May 2021 11:00:47 Hours

தெற்கு நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் 64 வது படைப்பிரிவினால் ஏழை குடும்பத்திற்கு வீடு

மாங்குளம், மாவலப்பட்டிமுறிப்பு பகுதியில் வசிக்கும் திரு.வீ.விக்கினேஸ்வரன் என்பவரிள் கஷ்டங்களை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்துக்கு அவசியமான வீடொன்றை நிர்மானித்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 64 வது படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரட்ன அவர்களின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்‌ஷ அவர்களின் அறிவுரைக்கமைய ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்னவின் வேண்டுகோளின் பேரில் கொழும்பு திரு. திருமதி டி.லக்ஸ்மன் என்பவரால் நிதி உதவி வழங்கப்பட்டது.

643 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஷிக பெரேரவின் மேற்பார்வையில் 23 வது விஜயபாகு காலாட் படையின் மனித வள மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் நிர்மாண செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 12 வது போர் வெற்றி விழாவை நினைவுக் கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.

அதே தினத்தில், ஒடுசுட்டான் சின்னசலம்பன் பகுதியிலுள்ள திரு. ஆர். சந்திரகுமார அவரது பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வீட்டை முழுமையாக அமைத்துக் கொடுக்கும் பணிகளை 64 வது படைப்பிரிவின் தளபதியால் தெற்கு நன்கொடையாளரின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைய மேற்படி அவசியம் உள்ளவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்கும் பணிகள் நாடு முழுவதிலுமுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டன.